/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி கமிஷனர் தகவல்
/
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி கமிஷனர் தகவல்
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி கமிஷனர் தகவல்
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி கமிஷனர் தகவல்
ADDED : ஏப் 27, 2025 07:03 AM
தேனி : தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்க உள்ளதாக நகராட்சி கமிஷனர் ஏகராஜ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட தலைநகரமாக உள்ளது. கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களில் பலரும் தேனியை கடந்து செல்கின்றனர்.
ஆனால், தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோடு பகுதிகள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி உள்ளன.
ஆக்கிரமிப்பு அகற்றாததால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ஆனால், அனைத்து துறைகள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் கூட்டம் என பெயரளவில் நடத்தி, அக்., டிச., ஜன.,யில் பெயரளவில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றினர். தற்போது நேருசிலை சிக்னல், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இதுபற்றி தேனி நகராட்சி கமிஷனர் கூறுகையில், 'பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜவாயக்காலில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகள் நிறைவடைந்ததும், நகர்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கும் என்றார்.