/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அபராதம்
/
இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அபராதம்
ADDED : ஜூலை 09, 2025 06:57 AM
கூடலுார் : கூடலுாரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் நேற்று காலையில் இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை, ஆடு அடிக்கும் தொட்டியில் ஆடுகளை வெட்டாமல்
ரோட்டிலேயே வெட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடந்தால் அபராத தொகை கூடுதலாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மெயின் பஜாரில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.