/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக பூட்டிய நகராட்சி பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது
/
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக பூட்டிய நகராட்சி பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக பூட்டிய நகராட்சி பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக பூட்டிய நகராட்சி பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது
ADDED : ஜூலை 23, 2025 12:29 AM
தேனி; தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக பூட்டி வைக்கப்பட்டிருந்த நகராட்சி ஆரம்பப் பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது.
தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட மத்திய அமைச்சரவைக்குழு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. இப்பள்ளிக்கான இடத்தேர்வு பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் செய்து வந்தது. பெரியகுளம் தாலுகாவில் உள்ள 5 ஏக்கர் அரசு நிலம் பற்றி பள்ளி நிர்வாகத்தினருக்கு வருவாய்த்துறை யினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்தாண்டு வகுப்புகள் துவங்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால் அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் தற்காலிகமாக செயல்பட தீர்மானிக்கப்பட்டது. பள்ளியில் சுமார் ரூ.9.90 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்ட போது நகராட்சி ஆரம்பபள்ளி வகுப்புகள் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் கேந்திரிய பள்ளி திறப்பு, அட்மிஷன் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. பள்ளி கட்டடம் பராமரிப்பு செய்து பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதை தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்ட ஆரம்பப் பள்ளி மீண்டும் நகராட்சி கட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மீண்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளி தரப்பில் வகுப்பறைகள் கேட்டால் இதே பள்ளியை ஒதுக்கீடு செய்யப்படும்.
அதுவரை நகராட்சி பள்ளி வகுப்புகள் அங்கு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.