/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா தேர்தல் கமிஷனில் செயலர் விளக்கம்
/
மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா தேர்தல் கமிஷனில் செயலர் விளக்கம்
மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா தேர்தல் கமிஷனில் செயலர் விளக்கம்
மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா தேர்தல் கமிஷனில் செயலர் விளக்கம்
ADDED : ஏப் 10, 2025 06:29 AM
மூணாறு: மூணாறு ஊராட்சி தலைவர் தீபா ராஜினாமா தொடர்பாக தேர்தல் கமிஷன் முன் செயலர் அளித்த விளக்கம் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த 3ம் வார்டு உறுப்பினர் தீபா 2024 பிப்.15 முதல் தலைவராக பொறுப்பு வகித்தார். அவர் மார்ச் 29ல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஊராட்சி செயலர் உதயகுமாரிடம் வழங்கிய ராஜினாமா கடிதத்தால் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டன.
கடிதம் கொடுத்த சிறிது நேரத்தில் தீபா காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். பூட்டிய அறையில் தன்னை கட்டாயப்படுத்தி தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ராஜினாமா கடிதத்தை கொடுக்க வைத்ததாக செயலரிடம் புகார் அளித்ததுடன், அது தொடர்பாக சி.சி.டி.வி. பதிவுகள் உள்பட ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனில் தீபா புகார் அளித்தார்.
அதனால் அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தீபா, செயலர் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி செயலர் உதயகுமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து கூறுகையில், 'ராஜினாமா கடிதத்தில் செயலரின் முன்பாக கையெழுத்திட வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டு ஏற்கனவே கையெழுத்திட்ட கடிதத்தை தன்னிடம் வழங்கியதாகவும், அதற்கான ரசீது தீபாவிடம் வழங்காமல் சிறிது நேரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி பிரமுகரிடம் வழங்கப்பட்டதாக,' கூறினார். இந்த விளக்கம் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக அமைந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.