ADDED : செப் 26, 2025 02:27 AM

மூணாறு: மூணாறு நகரில் 'ஹைமாஸ்' விளக்குகள் உள்பட தெரு விளக்குகள் எரியாததால் இருளில் தத்தளிக்கிறது.
சுற்றுலா நகரான மூணாறில் போதிய அளவில் தெரு விளக்குகள் இல்லை என்பதால் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
தவிர மூணாறு நகர், பழைய மூணாறு ஆகிய பகுதிகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏழு' ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டன.
அவற்றை முறையாக பராமரிக்காததால் அவ்வப்போது பழுதடைந்து வருகின்றன. தற்போது நகரின் மையப்பகுதியான மகாத்மா காந்தி சிலை அருகில் உள்ள ஹைமாஸ் உள்பட பல விளக்குகள் எரியவில்லை என்பதால் நகர் இருளில் தத்தளிக்கின்றது.
அதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள நகரில் இருளில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ஹைமாஸ் உள்பட தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.