ADDED : டிச 22, 2024 09:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : கம்பம் அருகே ஆனமலையன்பட்டியில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான முருக பக்தர்கள் குமுளி மலைப் பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆனமலையன்பட்டியில் இருந்து காமயகவுண்டன்பட்டி, கம்பம், கூடலுார், லோயர்கேம்ப் வழியாக கோயில் வரை பாதயாத்திரை சென்றனர்.
பால்குடம், காவடி எடுத்து ஆடிப்பாடி நடந்து சென்றனர். கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நன்கு மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதயாத்திரை செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.