/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 30, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா மே 6 ல் துவங்கி 10ல் முடிகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கொடியேற்று விழா நடந்தது.
அம்மன் படம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் கோஷத்துடன் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்திற்குப் பின் விழா நாள் வரை தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் கோயில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.