/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதார வளாகம் பராமரிப்பு செய்தும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் முத்துலாபுரம் ஊராட்சி
/
சுகாதார வளாகம் பராமரிப்பு செய்தும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் முத்துலாபுரம் ஊராட்சி
சுகாதார வளாகம் பராமரிப்பு செய்தும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் முத்துலாபுரம் ஊராட்சி
சுகாதார வளாகம் பராமரிப்பு செய்தும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் முத்துலாபுரம் ஊராட்சி
ADDED : ஏப் 08, 2025 05:13 AM

சின்னமனூர்: முத்துலாபுரம் ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகங்கள் பல லட்சம் செலவில் பராமரித்து பயன்படுத்தாமல் திறந்த வெளியை கழிப்பறை பயன்படுத்தும் அவல நிலையால் கிராமங்கள் சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது.
சின்னமனூர் ஒன்றியம் முத்துலாபுரம் ஊராட்சியில் 11 வார்டுகள் உள்ளன. 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவ்வூராட்சியில் ஊத்துப்பட்டி, கன்னியம்பட்டி, சின்ராம்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், பள்ளபட்டி, பரமத்தேவன்பட்டி உட்கடை கிராமங்கள் உள்ளன.
முத்துலாபுரம் ரோட்டோரங்களில் குப்பை குவியல் குவியலாக உள்ளன. ஊராட்சி அலுவலகத்திற்குள்ளேயே சாக்கடை தேங்கியுள்ளது.
துாய்மை பணிக்கான பேட்டரி வாகனங்கள் துருப்பிடித்து நிற்கிறது. பரமத்தேவன்பட்டி, முத்துலாபுரம், கன்னியம்பட்டி கிராமங்களில் தலா ரூ.1.80 லட்சத்தில் பராமரிப்பு செய்த பெண்கள் சுகாதார வளாகங்கள் பயன்பாடு இன்றி உள்ளது.
முத்துலாபுரத்தில் நடுநிலைப் பள்ளி கட்டடம் பாழடைந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள விளையாட்டு மைதானம் உபகரணங்கள் பயனின்றி உள்ளது. திடக்கழிவு குப்பைக் கிடங்கு புதர் மண்டி கிடக்கிறது. சேகரமாகும் குப்பையை பி.டி.ஆர்.,கால்வாய் கரையில் கொட்டுகின்றனர். கன்னியம்பட்டி கள்ளர் பள்ளி மேற்கூரைகள் சேதமடைந்து உள்ளது.
சுகாதாரம் பாதிப்பு
வீமராஜ், விவசாயி, எம்.துரைச்சாமிபுரம்: குடிநீர் சப்ளை இரு நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. ரூ.ஒரு கோடியில் நடைபெற்ற ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் அரைகுறையாக உள்ளதால் திட்டம் வீணாகி உள்ளது.
போதிய துப்புரவு பணியாளர்கள் இன்றி துப்புரவு பணிகள் மோசமாக உள்ளது. பெண்கள் கழிப்பிடங்கள் பராமரிப்பு செய்தும் பயன்பாடு இன்றி வீணாக உள்ளது.
குண்டும், குழியுமான தெருக்கள்
கோட்டை ராஜா, எம். துரைச்சாமிபுரம்: துரைச்சாமிபுரத்தில் மெயின் தெருவில் பிளாஸ்டிக் தொட்டி சேதமடைந்து உள்ளது. சாக்கடைகளில் சத்தம் செய்யாததால் மண் மேவி கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.
தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. ஆண்கள் சுகாதார வளாகம் கட்ட வேண்டும். குடிநீர் தரைத்தொட்டி கட்டி பயனற்று உள்ளது. மயான பாதை குறுகலாகவும், குண்டும், குழியுமாக உள்ளதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்வதில் காலனி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜல்ஜீவன் ஒப்பந்ததாரரை மாற்றும் நடவடிக்கை
கிராமங்களில் நிலவும் அடிப்படை பிரச்னை குறித்து ஊராட்சியில் விசாரித்த போது, 'ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முடிவடையாததால் ஒப்பந்தகாரரை மாற்றி வேறு நபரை நியமித்து பணிகள் நடைபெற உள்ளது.
துரைச்சாமிபுரத்தில் வீதிகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம். கன்னியம்பட்டியில் வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் இருப்பதால், பொது கழிப்பறை பயன்பாடு குறைவாக உள்ளது,'என்றனர்.

