ADDED : ஜூலை 13, 2025 12:37 AM
தேனி: பெரியகுளத்தில் நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேங்காய் வியாபாரி, விஷம் அருந்தி உயிரிழந்தார்.
பெரியகுளம் வடகரை கோட்டைமேடு பொன்கார்த்திகேயன் 41, தேங்காய் வியாபாரி. இவரதுமனைவி சீதாலட்சுமி 39. கருத்து வேறுபாட்டால் மதுரையில் உள்ள தந்தை வீட்டிற்கு ஓராண்டிற்கு முன் சீதாலட்சுமி சென்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பொன்கார்த்திகேயன் பழகினார். தொழில் நஷ்டமும் ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலை 9ல் நெஞ்சு வலிப்பதாக பெண்ணிடம் கூறினார். அவரை ஆட்டோ மூலம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொன்கார்த்திகேயனை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் விஷமருந்தி இருப்பது தெரிந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி புகாரில் பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.