/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காற்றாலை மின் சாதனங்களை திருடும் மர்ம நபர்கள்
/
காற்றாலை மின் சாதனங்களை திருடும் மர்ம நபர்கள்
ADDED : ஆக 29, 2025 03:41 AM
தேனி: கண்டமனுார், சின்னமனுார் பகுதிகளில் காற்றாலை மின் சாதனங்கள் திருட்டை தடுக்க வேண்டும் என காற்றாலை உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 148 காற்றாலைகள் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் 173 காற்றாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
காற்றாலைகள் தனியார் நிறுவனங்களின் பொறியாளர்கள் பராமரிப்பில் உள்ளன. காற்றாலைகளில் கண்காணிக்க காவலர்கள் நியமிக்காததால் மின்சாதனங்கள் தொடர் திருட்டு நடந்து வருகின்றன.
மின்சாதனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் மதிப்பிலானவை. இவற்றை ஒரு கும்பல் திருடிச் செல்வது தொடர்கிறது. திருட்டை தடுக்க காற்றாலை நிறுவனங்கள் கண்டமனுார், மயிலாடும்பாறை, சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் உரிய நடவடிக்கை இல்லை. காற்றாலை மின்சாதனங்கள் திருட்டை தடுக்க போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும் என நிறுவன உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.