ADDED : நவ 22, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் குறிஞ்சிநகர் முனிராஜ் 42. மனைவி மல்லிகா 38. இரண்டு மகன்கள் உள்ளனர். முனிராஜ் தேனி உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை நடத்தினார். குடும்ப பிரச்னையில் விஷம் சாப்பிட்டு மயங்கியவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்த்தனர்.
முனிராஜின் தந்தை நல்லபெருமாள் 60, மகனை பார்க்க மருத்துவக்கல்லுாரி சென்றபோது எழுதிய துண்டு காகிதம் வழங்க முயன்ற போது மனைவி தடுத்தார். முனிராஜ் நவ.20ல் இறந்தார். உயிர் பிரியும் தருணத்தில் வீடியோ பதிவில் இறப்பிற்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து தனது தந்தைக்கு அனுப்பினார். நல்லபெருமாள் தனது மகனின் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து, உடலை வழங்குமாறு போலீசில் புகார் அளித்தார். இறந்த முனிராஜின் உடல் மருத்துவக் கல்லுாரி பிரேத பரிசோதனை அறையில் வைக்கப் பட்டுள்ளது.

