/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு வழிப்பாதையில் குறுகிய பாலம்
/
கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு வழிப்பாதையில் குறுகிய பாலம்
கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு வழிப்பாதையில் குறுகிய பாலம்
கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு வழிப்பாதையில் குறுகிய பாலம்
ADDED : ஜூலை 12, 2025 03:54 AM

கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு பயன்படும் ஒரு வழிப்பாதையில் சேனை ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகிய பாலம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கம்பம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு, செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள ஆடடி மனை வழியாக ஒரு வழிப்பாதை உள்ளது. மதுரை, திண்டுக்கலில் இருந்து வரும் பஸ்கள், பிற நான்கு சக்கர வாகனங்கள் இந்த பாதை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த பாதையில் சேனை ஓடை குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியே ஒரு பஸ் மட்டுமே செல்ல முடியும். எதிரே வாகனம் வந்தால் நின்று தான் செல்ல முடியும்.
இந்த பாலம் குறுகலாக மட்டுமின்றி சேதமடைந்துள்ளது. பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலத்தின் அடியில் உள்ள மண்ணை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு நகராட்சி அனுப்பியது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. சேதமடைந்த பாலம் அபாய நிலையில் உள்ளதால் இதை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.