ADDED : டிச 26, 2024 05:32 AM

தேனி: தேனி தப்புக்குண்டு, கால்நடை மருத்துவக கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை சார்பில், தேசிய உழவர் தினம் -விழா சத்திரபட்டியில் நடந்தது.
தேசிய புத்தாக்க நிறுவன ஆய்வுத் திட்டத்தில், கறவை மாடுகளில் அறிகுறிகளற்ற மடிநோய் பாதிப்பு - மரபுசார் மருந்தின் பகுப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
விரிவாக்க கல்வித்துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கையேட்டை கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை வெளியிட்டார். பயனாளிகளுக்கு இடுபொருட்களை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா வழங்கி பேசினார்.
பெரியகுளம் உதவி இயக்குனர் சுப்ரமணியம், கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தின் தலைவர் செந்தில்குமார், உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார், வீரபாண்டி கால்நடைத்துறை உதவி டாக்டர் செல்வம் ஆகியோர் பேசினர். பேராசிரியர் மேதை நன்றிகூறினார்.

