/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய கராத்தே, யோகா போட்டி கம்பம் மாணவர்கள் சாதனை
/
தேசிய கராத்தே, யோகா போட்டி கம்பம் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 18, 2025 03:20 AM
கம்பம் : எர்ணாகுளத்தில் நடந்த தேசிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கராத்தே, யோகா போட்டிகளில் கம்பம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு எர்ணாகுளத்தில் தேசிய அளவிலான கராத்தே, யோகா போட்டிகள் நடந்தன. மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அண்ட் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்த போட்டிகளை நடத்தியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் கம்பம் பேர் லேண்ட், ராம் ஜெயம் வித்யா மந்திர், ஜெயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை, கராத்தே, யோகா பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பங்கேற்றனர்.
புனித செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த லுாதர் கிளைன், தரணி தரண், கிருத்திகேஷ், ஜெய்தேவ், ஹரீஸ்வா, தீபக் தர்சன், யுவன் சத்யா, நஷ்வந்த், மேத்ரா, ரித்திகா ஆகியோர் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றனர். கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த ஹர்சவர்த்தன், ஹரீஸ்மா , புதுப்பட்டி பேர் லேண்ட் பள்ளி ரிசப் ஆகியோர் கராத்தே, யோகாவில் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். பயிற்சியளித்த பயிற்சியாளர் ராமகிருஷ்ணனும் கவுரவிக்கப்பட்டார்.