/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜெ.ஏ.,கல்லுாரியில் தேசிய கணித விழா
/
ஜெ.ஏ.,கல்லுாரியில் தேசிய கணித விழா
ADDED : டிச 11, 2024 06:51 AM
பெரியகுளம்: ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணிதவிழா கொண்டாடப்பட்டது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கணிதத்தில் திறமைசாலிகளை ஆராய்தல் மன்றம் நிதியுதவியுடன், கணிதமேதை ராமானூஜம் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய கணிதவிழா இரு தினங்கள் நடந்தது.
அன்றாட வாழ்வில் கணிதத்தின் தேவை மற்றும் பயன்பாடு குறித்து ஊர்வலம் நடந்தது. முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் சாந்தாமேரி ஜோஷிற்றா, துணை முதல்வர் கீதா அந்துவானந்த் முன்னிலை வகித்தனர்.
திருச்சி புனித வளனார் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் ரூபன்ராஜ், பேராசிரியை பாத்திமா மேரி சில்வியா, கணிதத்துறை தலைவர் மேரிலதா,
மதுரை அமெரிக்கன் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் லூர்து இமாக்குலேட் ஆகியோர் கணிதத்தின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து பேசினர். பேராசிரியை அபிநயா நன்றி கூறினார்.

