/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை காளான்கள் கிலோ ரூ.800 க்கு விற்பனை
/
இயற்கை காளான்கள் கிலோ ரூ.800 க்கு விற்பனை
ADDED : அக் 31, 2024 03:13 AM

தேனி: கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் ஆங்காங்கே இயற்கை காளான்கள் முளைத்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்வேற்பு உள்ளதால் கிலோ ரூ.800க்கு விற்பனை செய்கின்றனர்.
திண்டுக்கல்- குமுளி பைபாஸ் ரோட்டில் வடுகபட்டி பிரிவு முதல் மதுராபுரி விலக்கு வரை பல இடங்களில் இயற்கை காளான்கள் முளைத்துள்ளன. இதனை பறிப்பதில் விசாயிகள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். காலையில் இதனை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டுசென்று விற்கின்றனர். காளான்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகுளம் முருகசாமி கூறியதாவது:இயற்கை காளான்கள் இடி, மின்னலுடன் மழை பெய்யும் காலத்தில் மட்டும் கிடைக்கும். இதனை வயல்வெளி, வரப்புகளில் வளர்ந்திருக்கும். வளர்ப்பு காளான்களை விட சுவையும், சத்துக்களும் அதிகம் உள்ளது. பறித்த சில மணி நேரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும். இல்லை என்றால் விணாகிவிடும். இவை கிலோ ரூ. 800 வரை சிலர் விற்பனை செய்கின்றனர். என்றார்