/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
/
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 26, 2025 04:27 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரத்தில் தே.மு.தி.க., சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நடந்தது. தேனி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார்.
ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் காசிமாயன், மாவட்ட பொருளாளர் பிரபு, கேப்டன் மன்ற ஒன்றிய செயலாளர் தங்கவேல், எஸ்.ரெங்கநாதபுரம் கிளை செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
வைகை அணை அருகே ஸ்ரீ ரெங்காபுரத்தில் நடந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மாவட்ட துணைசெயலாளர் ரத்தினவேல்பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
பெரியகுளம்: மாவட்ட அரசு மருத்துவமனையில், மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மூன்றாந்தல் பகுதியில் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு நகர செயலாளர் சன்னாசி, தெற்கு நகர செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் விஜய கண்ணன், தென்கரை பேரூர் செயலாளர் ராஜேஷ் கண்ணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.--