/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் இருந்து திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி தேவை
/
ஆண்டிபட்டியில் இருந்து திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி தேவை
ஆண்டிபட்டியில் இருந்து திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி தேவை
ஆண்டிபட்டியில் இருந்து திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி தேவை
ADDED : பிப் 01, 2024 05:16 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை, தேவதானப்பட்டி வழியாக திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கமிட்டியின் தலைவர் மீனாட்சிசுந்தரம் அரசு போக்குவரத்து துறையினருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஆண்டிபட்டி மையமாகக் கொண்டுள்ள பல கிராமங்களில் விவசாயம், ஜவுளித் தொழில் அதிகம் உள்ளது. விவசாய விளை பொருட்கள் ஜவுளிகளை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து தேவதானப்பட்டி சென்று அங்கிருந்து மற்ற ஊர்களுக்கான இணைப்பு பஸ்களில் செல்ல வேண்டி உள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு கடந்த காலங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டன.
ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்ல புள்ளிமான்கோம்பை வழியாக டவுன் பஸ் வசதி இருந்தாலும் கூட்டம் அதிகமாவதால் சிரமம் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களின் கட்டணமில்லா பயணம் அதிகம் உள்ளது. கூட்டம் அதிகமாகும் நேரங்களில் விவசாயிகள் வியாபாரிகள் விற்பனை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. படிப்பு, வேலை வாய்ப்பு, வியாபாரம் தொடர்பாக தினமும் பலரும் திண்டுக்கல், திருச்சி, கோவை பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
எனவே ஆண்டிபட்டி பகுதி மக்களின் நலன் கருதி திண்டுக்கல், பழநி, திருப்பூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். நகர் நல கமிட்டி தலைவர் கூறியதாவது: இப்பிரச்சினை குறித்து ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் மூலம் அரசு போக்குவரத்து துறையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் நடவடிக்கை இல்லை., என்றார்.