/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசுப்பள்ளி மாணவர்கள் 1280 பேருக்கு நீட் பயிற்சி மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்தது

ADDED : அக் 27, 2024 04:56 AM

தேனி : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி பெற மாவட்டத்தில் 1280 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு 8 இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட தேர்வுகளை எழுத பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது. நேற்று மாவட்டத்தில் 8 இடங்களில் துவங்கியது. ஒரு வட்டாரத்திற்கு 160 மாணவர்கள் வீதம் 1280 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலையில் பயிற்சியும், மதியம் தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க தலா 4 ஆசிரியர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி மையங்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், சி.இ.ஓ., இந்திராணி பார்வையிட்டனர்.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் செல்வரதி, உஷா, வசந்தி, வெள்ளையன் பயிற்சி வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.