நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் இருந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, காமாட்சிபுரம் வழியாக ஓடைப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வந்தது.
இதனை மாற்றி புதிய பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த வழித்தடத்தில் புதிய பஸ் பயன்பாட்டிற்கு வந்தது.
நேற்று தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில் எம்.பி., தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து பஸ்சை துவக்கி வைத்தார். போக்குவரத்து கழக அதிகாரி பாண்டியராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகி சீனிராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

