/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய ஒட்டு ரக கத்தரி அறிமுகம் * 15 மாதங்களுக்கு மேல் மகசூல் தரும்
/
புதிய ஒட்டு ரக கத்தரி அறிமுகம் * 15 மாதங்களுக்கு மேல் மகசூல் தரும்
புதிய ஒட்டு ரக கத்தரி அறிமுகம் * 15 மாதங்களுக்கு மேல் மகசூல் தரும்
புதிய ஒட்டு ரக கத்தரி அறிமுகம் * 15 மாதங்களுக்கு மேல் மகசூல் தரும்
ADDED : ஜன 02, 2025 11:57 PM
தேனி:சுண்டைக்காய் செடியுடன் இணைத்து புதிய ஒட்டு ரக கத்தரியை கோவை வேளாண் பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரகம் 15 மாதங்களுக்கு மேல் மகசூல் தரும் என பல்கலை குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தேனி தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தற்போது சாகுபடி செய்யப்படும் கத்தரி செடிகள் 6 மாத கால பயிராக உள்ளன. மேலும் நுாற்புழுக்கள் தாக்குதலில் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கோவை வேளாண் பல்கலை சார்பில் சுண்டைக்காய் செடியின் அடிப்பகுதி, கத்தரி செடியின் மேல் பகுதியை இணைந்து ஒட்டு கட்டி புதிய ரகம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த ரகம் சோதனைமுறையில் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒட்டு ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கத்தரி நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த ஒட்டுரக கத்தரிகள் வறட்சியை தாங்கி வளரும். நுாற்புழுக்கள் தாக்குலை எதிர்க்கும் சக்தி கொண்டவை. இந்த ரக கத்தரி 15-20 மாத பயிராக இருக்கும். இதனால் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறுவர் என்றனர்.