/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த புதிய இயற்கை பூச்சிக் கொல்லி
/
ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த புதிய இயற்கை பூச்சிக் கொல்லி
ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த புதிய இயற்கை பூச்சிக் கொல்லி
ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த புதிய இயற்கை பூச்சிக் கொல்லி
ADDED : ஜூன் 29, 2025 12:09 AM
கம்பம்: ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை (Thrips) கட்டுப்படுத்த இயற்கை பூச்சி மருந்தை இந்திய வேளாண் அறிவியல் மையத்தின் கீழ் இயங்கும் நறுமண பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR-IISR) கண்டு பிடித்துள்ளது.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளாவில் மட்டுமே அதிக பரப்பில் நடைபெறுகிறது. இடுக்கி,வயநாடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் உணவு மற்றும் மருந்துகளிலும் பயன்பாடு அதிகம் உள்ளது.
ஏலச் செடிகளை பல்வேறு நோய்கள் தாக்கும், அதிக மழை பெய்தால் அழுகல் நோய், சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளால் 30 முதல் 40 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த இந்திய வேளாண் அறிவியல் மையத்தின் துணை அமைப்பான கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமண பொருள்கள் ஆராய்ச்சி மையம் இயற்கை பூச்சிகொல்லி கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் ஏலச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதுடன், மண் வளம், செடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும், மகசூல் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி,வயநாடு பகுதிகளில் ஏலத்தோட்டங்களில் சோதனை ஒட்டம் மேற்கொண்டு விஞ்ஞானிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இயற்கை பூச்சிகொல்லி மருந்தை விஞ்ஞானிகள் எம்.செந்தில்குமார், கே. ஜேக்கப், எஸ். தேவசகாயம் தங்களது தீவிர ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர் என்று கோழிக்கோடு நறுமணப் பொருள்கள் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் தினேஷ் தெரிவித்துள்ளார். தனியார் வேளாண் இடுபொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இதை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருணை வடிவில் இருக்கும் இந்த இயற்கை பூச்சிகொல்லி மருந்தை ஏலத் தோட்டங்களில் பண்ணை உரங்கள் மூலம் மண்ணில் இட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டு பிடிப்பு ஏல விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.