ADDED : செப் 30, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிதாக டர்ப் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'டர்ப்' கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தும் வகையில் உள்ளது. அதே போல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 32 அடி நீளம், 16 அடி அகலத்தில் டர்ப் மைதானம் அமைகிறது. மூன்று, நான்கு மாதங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.
