UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் லட்சுமணக்குமார் 27.
இவரது மனைவி கார்த்திகா 26. இவர்களுக்கு திருமணமாகி 17 நாட்கள் ஆகிறது. லட்சுமணக்குமார் கம்பம் தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அலைபேசி சுவிட்ச் ஆப்பில் உள்ளது. உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி கார்த்திகா புகாரில் வடகரை போலீசார் லட்சுமணக்குமாரை தேடி வருகின்றனர்.
