ADDED : மார் 03, 2026 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே தினசரி நாளிதழ் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமை வகித்தார்.
தினமும் நாளிதழ் வாசிப்பதால் புதிய சிந்தனை, உலக நிகழ்வுகள், அறிவியல், தொழில் நுட்பம் குறித்து தெரிந்து கொள்ளவும், மொழித் திறனை வளர்க்கவும், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
டிஜிட்டல் உலகில் அலைபேசிக்கு பதிலாக நாளிதழ்களை வாசிப்பதால் மனதில் ஆழமாக பதிவு ஏற்படுகிறது.
இதனால் தினமும் காலையில் நாளிதழ் வாசிப்பதை மாணவர்கள் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என தலைமை யாசிரியர் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

