UPDATED : அக் 24, 2026 11:14 PM
ADDED : அக் 24, 2026 09:06 PM

அ நிறம் | அளவு
கம்பம்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த கம்பம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவும், சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்களும் இணைந்து உழவர் சந்தை அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். முகாமிற்கு பள்ளியின் தாளாளர் அச்சுதநாகசுந்தர் தலைமை வகித்து நிலவேம்பு கசாயம் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி இணை செயலர் பவன் தேவ், சித்தா டாக்டர் சொர்ணபாரதி, பள்ளி முதல்வர் ஆனந்தகுமார் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
