/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாரல் விழாவில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
/
சாரல் விழாவில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
ADDED : செப் 29, 2025 06:17 AM
கம்பம் : சுருளி அருவியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
சுருளி அருவியில் சாரல் விழா கடந்த 2 நாட்களாக நடந்தது. காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின், சித்தா பிரிவு சார்பில், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கும் ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் நர்சுகள் நிலவேம்பு, கபசுரகுடிநீர் முகாமில் பங்கேற்றவர்கள், பொது மக்களுக்கு வழங்கினர். ஜில் சீதோஷ்ண நிலையாக இருந்ததால், அரசு அதிகாரிகளும், பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கி பருகினர்.
நாய் கண்காட்சி நேற்று முன்தினம் மாலை நடந்த நாய் கண்காட்சியில் 27 நாய்கள் பங்கேற்றன. இதில் 5 நாட்டு ரக நாய்களும், 22 வெளிநாட்டு ரக நாய்களும் பங்கேற்றன. வெளிநாட்டு இனங்களில் ஜெர்மன் ஷெப்பர்டு, புலி குட்டான் எனும் நாட்டு இன நாய் உள்ளிட்ட பல நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.