/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்
/
ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்
ADDED : ஜூலை 16, 2025 06:58 AM
போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். 'விடுபட்ட மகளிருக்கான உரிமை தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தரும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்,' என எம்.பி., கூறினார். அப்போது 'மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் ஒரு நபர் கார்டு, முதியோர் ரேஷன் அரிசி பல மாதங்களாக வழங்காமல் உள்ளது. முதலில் அதை வழங்க வேண்டும் என பெண்கள் புகார் கூறினர். நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி., கூறினார். 451 மனுக்கள் பெறப்பட்டன.

