/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
40 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லை: மின் கசிவால் தொடரும் தீ விபத்துகள்
/
40 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லை: மின் கசிவால் தொடரும் தீ விபத்துகள்
40 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லை: மின் கசிவால் தொடரும் தீ விபத்துகள்
40 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லை: மின் கசிவால் தொடரும் தீ விபத்துகள்
ADDED : ஜன 15, 2024 11:26 PM

மூணாறு: மூணாறு பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பராமரிக்கப் படாததால் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மூணாறில் கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிரந்தரமாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்காலிகமாகவும் வேலை செய்கின்றனர். மூணாறு நகர் உட்பட எஸ்டேட் பகுதிகளுக்கு கம்பெனி சார்பில் மின்சாரம் வினியோகிக்கப் படுவதால் அது தொடர்பான பராமரிப்பு பணிகளும் கம்பெனி செய்து வருகிறது.
தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு 40 ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வீடுகள் இரு அறைகளை கொண்டது என்பதால் 2 பல்புகள் உபயோகிக்கும் வகையில் 'ஒயரிங்' செய்யப்பட்டது. தற்போது வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்ஸி உள்பட பல்வேறு மின் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்ப ஒயரிங் செய்து கொடுக்கவும், பராமரிப்புப் பணிகள் செய்யவும் தோட்ட நிர்வாகம் தயாரில்லை. அதனால் தொழிலாளர்களின் வீடுகளில் மின்கசிவு மூலம் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
அதுபோன்று ஜன., 12 இரவு கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் மின் கசிவு ஏற்பட்டன. மூலம் ஏற்பட்ட தீவிபத்தில் எட்டு வீடுகள் எரிந்து நாசமாகின. அதில் லட்சக்கணக்கான பொருட்கள் தீக்கிரையாகி மாற்று உடை இன்றி தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். தீ விபத்துகள் நடந்து அசம்பாவிதங்கள் நடக்கும் முன் குடியிருப்புகளில் மின் இணைப்புகளை நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.