தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கோயிலில் செக்யூரிட்டி இன்றி பாதுகாப்பு கேள்விக்குறி

கோயிலில் செக்யூரிட்டி இன்றி பாதுகாப்பு கேள்விக்குறி

கோயிலில் செக்யூரிட்டி இன்றி பாதுகாப்பு கேள்விக்குறி


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் செக்யூரிட்டிகள் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக்கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்),அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய 3 சன்னதிகளுக்கும் தனித்தனியாக கொடி மரங்கள் இருப்பது சிறப்பாகும்.

இக் கோயிலில் நவ.10 முதல் கந்த சஷ்டி விழா துவங்கி, நவ.15 ல் சூரசம்ஹாரம் மறுநாள் நவ.16ல் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இக்கோயிலில் மூன்று முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலையில் ஒருவர், மாலை முதல் அதிகாலை வரை இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மூன்று செக்யூரிட்டிகள் இருந்த நிலையில் தற்போது ஒருவர் மட்டும் உள்ளார். அவரும் சில நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றார். இதனால் இரவில் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் இல்லை. இதுகுறித்து செயல் அலுவலர் சுந்தரி கூறுகையில்,‘ புதிதாக இரு முன்னாள் ராணுவத்தினரை செக்யூரிட்டியாக நியமிக்க வேண்டும் என எஸ். பி., பிரவீன் கவுதமிடம் மனு கொடுத்துள்ளதாக,’ தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us