/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்
/
நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்
ADDED : டிச 07, 2025 08:45 AM
கூடலுார்: கூடலுாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விசாரணை மேற்கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்தவரை நியமனம் செய்துள்ளதாக மாற்றுத்திறனாளி கண்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கூடலுார் நகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். அரசு அறிவிப்பில் மாவட்ட நிர்வாகம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கருதினோம். ஆனால் விண்ணப்பித்திருந்த அனைவரையும் விசாரணை மேற்கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்த தங்கத்துரையை நியமனம் செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

