/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
12 பள்ளிகளுக்கும் குறைவாக ஆய்வு 145 பி.இ.ஓ.,க்களுக்கு நோட்டீஸ்
/
12 பள்ளிகளுக்கும் குறைவாக ஆய்வு 145 பி.இ.ஓ.,க்களுக்கு நோட்டீஸ்
12 பள்ளிகளுக்கும் குறைவாக ஆய்வு 145 பி.இ.ஓ.,க்களுக்கு நோட்டீஸ்
12 பள்ளிகளுக்கும் குறைவாக ஆய்வு 145 பி.இ.ஓ.,க்களுக்கு நோட்டீஸ்
ADDED : அக் 19, 2024 06:31 AM

தேனி : ஆய்வு பணி மேற்கொள்ளாத வட்டார கல்வி அலுவலர்களுக்கு(பி.இ.ஓ.,) விளக்கம் கேட்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இத்துறையில் இயங்கும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த மாதந்தோறும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் குறைந்த பட்சம் 12 தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்து, அதன் விபரம் அளிக்க தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. ஒவ்வொரு வட்டாரத்திற்கு 2 பள்ளிகளில் ஆண்டாய்வு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வுகளை முடித்து 'எமிஸ்' இணையத்தில் பதிவேற்றவும் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 'எமிஸ்' தரவுகளை ஆராய்ந்து , '12 பள்ளிகளுக்கும் குறைவாக ஆய்வு செய்ததாக வட்டார கல்வி அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 145 வட்டார கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது. தொடக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில் 'தொடக்கக்கல்வி பாடங்கள் மாணவருக்கு இன்றியமையாதது. இந்த கற்றல் திறனை ஆய்வு செய்வதற்கு செல்லாமல் இருப்பது குறித்து பி.இ.ஓ.,க்களின் விளக்கம் கிடைத்தபின் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ' என்றனர்.

