/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அணை அருகில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ்
/
அணை அருகில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 03, 2026 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு நுழைவு பகுதியில் அணைக்கட்டையொட்டி விதிமீறி ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர். அப்பகுதியில் கட்டுமானம் உள்பட பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
அதனால் விதிமீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளையும் தாமாக அகற்ற வேண்டும் என மின்வாரிய உதவி பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் கடை வைத்துள்ளவர்களிடம் நோட்டீஸ் அளித்தனர். அகற்றாத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடைகள் அகற்றப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

