/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுத்தையை சூழ்ந்த செந்நாய்கள் வனத்துறையினர் விரட்டினர்
/
சிறுத்தையை சூழ்ந்த செந்நாய்கள் வனத்துறையினர் விரட்டினர்
சிறுத்தையை சூழ்ந்த செந்நாய்கள் வனத்துறையினர் விரட்டினர்
சிறுத்தையை சூழ்ந்த செந்நாய்கள் வனத்துறையினர் விரட்டினர்
ADDED : ஜன 03, 2026 06:06 AM

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான பெரியவாரை எஸ்டேட், சோலைமலை டிவிஷனில் சிறுத்தையை பல மணி நேரம் சுற்றி வளைத்த செந்நாய்களை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.
அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு சிறுத்தையை நான்கு செந்நாய்கள் சூழ்ந்து விரட்டின. அவற்றிடம் இருந்து தப்ப எண்ணிய சிறுத்தை சோலைமலையில் சோலை வளைவு என்ற பகுதியில் புதருக்குள் பதுங்கியது. அதனை சுற்றி செந்நாய்கள் சூழ்ந்து நின்றன.
வெகு நேரம் ஆகியும் செந்நாய்கள் செல்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து செந்நாய்கள், சிறுத்தை ஆகியவற்றை விரட்டினர்.
விமல்ராஜ் கூறுகையில்,' புதருக்குள் பதுங்கிய சிறுத்தை வெகு நேரம் ஆகியும் வெளியேறாத நிலையில் செந்நாய்கள் இரண்டு மணி நேரம் சூழ்ந்து நின்றன.
அதனால் சிறுத்தைக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்க கூடும் என எண்ணி வனத்துறை அதிரடி படையினருக்கு தகவல் அளித்தேன்.
அவர்கள் இரவு 7:30 மணியளவில் பட்டாசு வெடித்து செந்நாய்களை விரட்டினர்.
அதன் பிறகு புதருக்குள் இருந்து சிறுத்தை வெளியேறி காட்டிற்குள் சென்றது,' என்றார்.

