/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூப்பாறை ரோட்டில் அருவி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
பூப்பாறை ரோட்டில் அருவி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
பூப்பாறை ரோட்டில் அருவி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
பூப்பாறை ரோட்டில் அருவி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : ஜன 03, 2026 06:05 AM

போடி: தமிழக, கேரளா பகுதியில் பெய்த கன மழையால் போடிமெட்டு - பூப்பாறை செல்லும் ரோட்டில் மலை உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டார் போல நீர் அருவியாய் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு உள்ளது. தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் பூப்பாறை உள்ளது.
எப்போதும் குளிர்ச்சி யாகவும், பனிப்பொழிவுடன் பசுமையாக காணப்படும். தேனியில் இருந்து 44 கி.மீ., தூரம் 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பகுதியை கடந்து சென்றால் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் தமிழக எல்லை பகுதியான போடிமெட்டு உள்ளது.
இங்கிருந்து பூப்பாறை செல்லும் ரோட்டில் இருபுறமும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பனிப்பொழிவும், பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே வழிந்தோடும் நீர் அருவிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவருகிறது.
புத்தாண்டு விடுமுறைக்காக மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தி அருவியை ரசித்து செல்கின்றனர். பலர் அருவி முன்பாக நின்று அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

