/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருத்த பணியில் உரிய தகவல் அளிக்காத 12 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
/
திருத்த பணியில் உரிய தகவல் அளிக்காத 12 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
திருத்த பணியில் உரிய தகவல் அளிக்காத 12 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
திருத்த பணியில் உரிய தகவல் அளிக்காத 12 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : டிச 30, 2025 05:48 AM
தேனி: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது உரிய தகவல் தெரிவிக்காத 12,572 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் நவ., 4 முதல் டிச., 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. டிச., 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் இருந்து 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது 10.04 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள், உறவினர்கள் இடம் பெற்றிருந்தால் அவர்கள் விவரங்களை சிலர் சரியாக வழங்க வில்லை. மாவட்டத்தில் அவ்வாறு விவரங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு தேர்தல் ஆணையம் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதன்படி ஆண்டிபட்டி தொகுதியில் 2424, பெரியகுளம் 4134, போடி 3183, கம்பம் 2831 என மொத்தம் 12,572 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
கடிதம் கிடைத்தவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய விவரங்கள், அடையாள சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

