/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
என்.எஸ்.,மெட்ரிக் பள்ளி 47 வது விளையாட்டு விழா
/
என்.எஸ்.,மெட்ரிக் பள்ளி 47 வது விளையாட்டு விழா
ADDED : ஜன 13, 2024 04:05 AM
தேனி, : தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47 வது விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார் வரவேற்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாக இணைச் செயாலளர் பழனிவேல்முருகன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
அஜய்கார்த்திக் ராஜா அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசினார். விழாவை உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். கலை நிகழ்ச்சிகளை பள்ளியின் முன்னாள் மாணவி ஷர்மிளா துவக்கி வைத்து பேசினார்.
பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, என்.எஸ்., அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் டீன் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமர் நன்றி கூறினர்.