sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வடுகபட்டியில் இடிந்து விழும் அபாயத்தில் நுாலகம்; புதிய கட்டடத்திற்கு மதீப்பீடு தயாரிப்பில் தாமதம்

/

வடுகபட்டியில் இடிந்து விழும் அபாயத்தில் நுாலகம்; புதிய கட்டடத்திற்கு மதீப்பீடு தயாரிப்பில் தாமதம்

வடுகபட்டியில் இடிந்து விழும் அபாயத்தில் நுாலகம்; புதிய கட்டடத்திற்கு மதீப்பீடு தயாரிப்பில் தாமதம்

வடுகபட்டியில் இடிந்து விழும் அபாயத்தில் நுாலகம்; புதிய கட்டடத்திற்கு மதீப்பீடு தயாரிப்பில் தாமதம்


ADDED : அக் 04, 2024 07:00 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : வடுகபட்டியில் இடியும் நிலையில் உள்ளநுாலகத்தைகட்டுவதற்கு பேரூராட்சிகளின்இயக்குனர் கிரண் குராலா உத்தரவிட்டும்,செயற்பொறியாளர் திட்ட மதிப்பீடு செய்ய தாமதப்படுத்தி வருகிறார்.

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் கவியரசு கண்ணதாசன்நுாலகம்1990 பிப்.4ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 2400 சதுரடியில் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டது.

50 ஆயிரத்திற்கும் அதிகமானநுால்கள் உள்ளன.3600 சந்தாதாரர்கள், 110 புரவலர்கள், தினமும் 120 வாசகர்களும்வந்து செல்கின்றனர்.

வார விடுமுறை வெள்ளிக்கிழமை தவிர காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது.போட்டித் தேர்வர்களுக்கானநுால்களும்ஆன்லைன் வசதியும் உள்ளது.

கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சுவர்கள் மேல் தளம் விரிசல் ஏற்பட்டும் அஸ்திவார பில்லர்கள் முழுமையாக சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.

மழைக்காலங்களில் மழைநீர்நுாலகத்தில்விழுகிறது. இடியுடன் மழை பெய்யும் காலங்களில் வாசகர்கள்நுாலகம்செல்வதற்கு தயங்குகின்றனர்.

வடுகபட்டி பேரூராட்சி நிர்வாகம்,நுாலகவளர்ச்சிக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையின் அடிப்படையில் சென்னை பேரூராட்சி இயக்குனர் கிரண்குராலா சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.

பேரூராட்சி செயற்பொறியாளர் ஜனார்த்தனன் திட்ட மதிப்பீடு தயார் செய்யாமல் தாமதப்படுத்திருக்கிறார்.இதனால் புதிய கட்டடம் கட்டுமான பணி கிடப்பில் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us