/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்பு பேட்ஜ் உடன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கருப்பு பேட்ஜ் உடன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ் உடன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ் உடன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 20, 2024 05:39 AM

தேனி: சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், ஒய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்து அதனை நிறைவேற்றாமல் உள்ள தி.மு.க., அரசை கண்டித்து தேனியில் பெண்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக தேனி கம்பம் ரோட்டில் துவங்கிய ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு பெற்றது. மாவட்ட நிதி காப்பாளர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர்கள் பவுன்தாய், சுமதி, காமாட்சி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சென்னமராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஐ.சி.டி.எஸ்., மாவட்டச் செயலாளர் ராதிகா, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கிருபாவதி, அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சின்ன்ச்சாமி ஆகியோர் பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் நிறைவுரை ஆற்றினார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் தங்கமீனா நன்றி கூறினார்.