/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாட்டிற்கு வராத ஹைமாஸ் விளக்குகள்
/
பயன்பாட்டிற்கு வராத ஹைமாஸ் விளக்குகள்
ADDED : மார் 15, 2024 06:37 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நகர் பகுதியில்  முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைத்து ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
கொச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி உள்ளது.
கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்டில் இருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரை 2 கி.மீ., தூரத்தில் பல இடங்களில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறைந்த திறன் கொண்ட மின் விளக்குகளால் போதுமான வெளிச்சம் கிடைப்ப தில்லை.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் எதிரில், சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி,  டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு, டி.சுப்புலாபுரம் விலக்கு ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளுக்கு மின் இணைப்பு இன்னும் கிடைக்கவில்லை.
இதனால் ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.  தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

