/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் தேவை
/
வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் தேவை
வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் தேவை
வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் தேவை
ADDED : மார் 20, 2025 05:40 AM
கம்பம்: வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள்,மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டார சுகாதார நிலையங்கள் கட்டுப்பாட்டில் தலா 4 முதல் 6 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களை வட்டார சுகாதார நிலையங்களுக்கு அனுப்புகின்றனர்.
அங்கு பிரசவ வார்டு, ஸ்கேன் வசதிகள் இருந்த போதும், மகப்பேறு டாக்டர் இல்லை. இதனால் சிறு பிரச்னை என்றாலும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளிலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
எனவே வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
சமீபமாக டெங்கு, சிக்குன் குனியா, எலி காய்ச்சல் என பல வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. கிராம செவிலியர்கள் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களும் அதிகளவில் காலியாக உள்ளது. எனவே, டொம்புசேரி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகத்தை விரிவுபடுத்தி அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க வட்டார சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்களை அமைத்து, தேவையான எண்ணிக்கையில் லேப் டெக்னீசியன்களை நியமித்தால், உடனுக்குடன் ரத்த பரிசோதனைகள் செய்து, காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
எனவே வட்டார சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர் நியமனம், மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும்.