/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஓசி' சிக்கன் தராதவருக்கு கத்திக் குத்து
/
'ஓசி' சிக்கன் தராதவருக்கு கத்திக் குத்து
ADDED : பிப் 06, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் அருகே சருத்துபட்டி வைரவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினராஜ் 65. 'சிக்கன் 65' பொறித்ததை வீட்டிற்கு வாங்கி சென்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 50. ரத்தினராஜிடம் 'சிக்கன் ஓசி' கேட்டுள்ளார்.
தர மறுத்த ரத்னராஜை அவதூறாக முருகன் பேசியுள்ளார். இது குறித்து கேட்ட ரத்தினராஜாவை கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்தினராஜ் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் முருகனை கைது செய்தனர்.