/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் சென்ற குழாய் துண்டிப்பால் ஓடைப்பட்டி பாலைவனமாக மாறுகிறது குறைதீர் கூட்டத்தில் விவசாயி குமுறல்
/
தண்ணீர் சென்ற குழாய் துண்டிப்பால் ஓடைப்பட்டி பாலைவனமாக மாறுகிறது குறைதீர் கூட்டத்தில் விவசாயி குமுறல்
தண்ணீர் சென்ற குழாய் துண்டிப்பால் ஓடைப்பட்டி பாலைவனமாக மாறுகிறது குறைதீர் கூட்டத்தில் விவசாயி குமுறல்
தண்ணீர் சென்ற குழாய் துண்டிப்பால் ஓடைப்பட்டி பாலைவனமாக மாறுகிறது குறைதீர் கூட்டத்தில் விவசாயி குமுறல்
ADDED : அக் 19, 2024 04:54 AM
சின்னமனூர் : சின்னமனூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தண்ணீர் குழாய் துண்டித்ததால் ஓடைப்பட்டி பாலை வனமாக மாறுகிறது என்று விவசாயி பேசினார். சின்னமனூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருமண மண்டபத்தில் நேற்று கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
பாண்டியன், விவசாய சங்க தலைவர்: மக்கும் குப்பையை மக்க வைத்து இயற்கை உரங்கள் தயார் செய்ய வேண்டும்.
ராசு, விவசாயி : உள்ளாட்சி அமைப்புகளில் இயற்கை உரம் தயாரிப்பில் திடக்கழிவுமேலாண்மை திட்டத்தில் விவசாயிகளையும் பங்கு பெற செய்யலாம்.
வேளாண் அதிகாரி : 400 மண்புழு படுக்கைள் அமைக்க நமது மாவட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. எட்டு வட்டாரங்களுக்கும் பிரிந்து வழங்கப்பட்டுள்ளது. மண்புழு உரம் இயற்கை உரங்களில் பிரதானமானது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்துங்கள். வீடும்,நிலமும் சுத்தமாக இருக்கும்.
தனி நபருக்காக குழாய்கள் சேதம்
ராஜன், ஓடைப்பட்டி : சின்னமனுாரில் எங்கள் நிலத்தில் 'போர்' அமைத்து ஓடைப்பட்டி பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை தனி நபருக்காக உடைத்து விட்டனர். இதனால் எங்கள்பகுதி பாலைவனமாக மாறி வருகிறது. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா. நாங்கள் வரி கட்டவில்லையா. எங்களின் வாழ்வாதாரம் முழுவதும் அழிந்து வருகிறது.
ராஜா, விவசாயிகள் சங்க தலைவர் சின்னமனூர் :
குழாய் அமைத்து சின்னமனூரிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றதால் இப் பகுதி நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்படும் என்றார்.அப்போது ஓடைப்பட்டி விவசாயிகள் 10 க்கும் மேற்பட்டோர் எழுந்து இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
கலெக்டர் : உங்களுக்குள்ள பிரச்னைகளை இங்கு பேச வேண்டாம். குறைகளை மட்டும் பதிவு செய்யுங்கள்.
ராமராஜ், கோம்பை : 18 ம் கால்வாய் பல இடங்களில் கரைகள் சேதமடைந்துள்ளது. செடி,கொடிகள் வளர்ந்து புதராக உள்ளது. கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவாஜி, அணைப் பட்டி : சண்முகா நதி அணை பாசனத்தில் அணைப்பட்டியை சேர்க்க வேண்டும். மறுகால் தண்ணீர் வழிந்தோடும் வரட்டாறை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் . சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்.
கலெக்டர் : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

