/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு
/
பணியாளரை திட்டியதாக அலுவலர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2026 05:44 AM
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துராசு 52,வை ஜாதியை கூறி திட்டியதாக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் 52, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராசு பேரூராட்சியில் தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். டிச. 23 ல் பேரூராட்சி அலுவலகத்தில் இவருக்காக ஒதுக்கப்பட்ட சேர், டேபிள் தூக்கி வீசப் பட்டிருந்தது.
இது குறித்து முத்துராசு, அலுவலக்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார்.
இதற்கு ராதாகிருஷ்ணன், முத்துராசுவை ஜாதியை கூறி திட்டி, 'அலுவலகத்தில் என் முன்னே நீ உட்காரக்கூடாது, உள்ளே வரக்கூடாது,' என மிரட்டியுள்ளார். முத்துராசு புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-

