/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
/
நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
ADDED : நவ 18, 2024 07:07 AM

மூணாறு, : மூணாறில் போக்குவரத்து நெரிசல் வழக்கமாகி விட்டபோதும், அதற்கு தீர்வு காணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
சுற்றுலா நகரான மூணாறிலும், சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளிலும் பண்டிகை விடுமுறை, சுற்றுலா சீசன் ஆகிய நாட்களில் பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
அதேபோல் வார விடுமுறை நாட்களில் பயணிகள் வருகையை பொறுத்து நெரிசல் காணப்படும். அதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஞாயிறு விடுமுறை நாளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மூணாறு நகர் வந்து செல்வர். அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிபடுவது தொடர்கதையாக உள்ளது. இது போன்ற நிலை கடந்த 2 நாட்களாக நிலவியது. இப்போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் போலீசார் உள்பட அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.