/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் தாலுகாவில் சான்றிதழ்கள் வழங்க அலுவலர்கள் அலைக்கழிப்பு கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
/
பெரியகுளம் தாலுகாவில் சான்றிதழ்கள் வழங்க அலுவலர்கள் அலைக்கழிப்பு கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
பெரியகுளம் தாலுகாவில் சான்றிதழ்கள் வழங்க அலுவலர்கள் அலைக்கழிப்பு கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
பெரியகுளம் தாலுகாவில் சான்றிதழ்கள் வழங்க அலுவலர்கள் அலைக்கழிப்பு கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ADDED : மே 20, 2025 01:22 AM
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. தாலுகாவில் 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் கல்வி நிலையங்களில் சேர விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கல்வி நிலையங்களில் சேர ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் அவசியம். இச் சான்றுகளை பெற்றுத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இச் சான்றுகள் பெற உரிய ஆதாரங்களை இணைத்து இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தால்
காரணம் இன்றி தள்ளுபடி செய்வது,மனுக்களை கிடப்பில் போடுவது, அலைக்கழிப்பு செய்வதும் தொடர்கிறது. விண்ணப்பதாரர்கள் மற்றும் புரோக்கர்கள் சில அலுவலர்களை நேரில் சென்று கவனித்த பின் சான்றிதழ்கள் பெறும் நிலை உள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்குள் வழங்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
ஆனால் 20 நாட்களுக்கும் அதிகமாக சான்றிதழ்கள் வழங்க 'ஜவ்வாக' இழுக்கின்றனர்.
சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய குறிப்பாக தென்கரை பிட்-1, லட்சுமிபுரம் உள்ளிட்ட சில வி.ஏ.ஓ.,க்கள் பரிசீலிப்பதில் அலட்சியம் செய்து பொதுமக்களை அலையவிடுகின்றனர். வி.ஏ.ஓ., உரிய காரணமின்றி நிராகரிப்பதை ஆர்.ஐ.,யும் காரணத்தை கண்டறியாமல் நிராகரிப்பு செய்கிறார்.
அலுவலர்கள் சிலரிடையே நிலவும் 'ஈகோ' வினால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஆப்சென்ட் அலுவலர்கள்
மாணவர் சேர்க்கை நேரங்களில் வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள், துணை தாசில்தார் தங்களுக்கான முகாம் அலுவலங்களில் பெரும்பாலும் இருப்பது இல்லை. பொதுமக்கள் கேட்டால் கேம்ப், விடுப்பு என பதில் கூறுகின்றனர். பள்ளி, கல்லுாரி சேர்க்கை மாதமாகும்.
இரு மாதங்களுக்கு சான்று அளிக்கும் அதிகாரிகள் அலுவலக நேரத்தில் பணியில் இருக்க ஆர்.டி.ஓ., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.