/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரமற்ற பணியால் பெயர்ந்த ரோடு அழகர்நாயக்கன்பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
/
தரமற்ற பணியால் பெயர்ந்த ரோடு அழகர்நாயக்கன்பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
தரமற்ற பணியால் பெயர்ந்த ரோடு அழகர்நாயக்கன்பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
தரமற்ற பணியால் பெயர்ந்த ரோடு அழகர்நாயக்கன்பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 09, 2024 07:05 AM

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், அழகர்நாயக்கன்பட்டியில் தரமின்றி தார் ரோடு அமைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி முதல் வார்டு சமுதாயம் கூடம் முதல் அய்யனார் கோயில் வரை முதல்வர் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1100 மீட்டர் நீளத்திற்கு ரூ.40.40 லட்சம் மதீப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியினை ஒப்பந்ததாரர் ஜெகநாதன் நேற்று முன்தினம் செய்தார்.
ரோடு பணியில் சரியான விகிதத்தில் ஜல்லி கற்கள், தார் கலவை இல்லாமல் அவசரகதியில் ரோடு போடப்பட்டதாக புகார் எழுந்தது. தார்ரோடு பணி முடிந்த சிலமணி நேரத்திலே பொதுமக்கள் சிலர் ரோட்டினை கையால் தொட்டதில் பெயர்ந்து வந்ததால் ஆத்திரம் அடைந்தனர்.
தரமற்ற ரோடு பணி குறித்து தலைவர் கோட்டையம்மாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய பி.டி.ஓ., ஜெகதீச சந்திரபோஸிடம் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் சேகர் ரோட்டின் மையத்தில் தோண்டி சாம்பிள் எடுத்தனர்.
உதவி செயற்பொறியாளர் கூறுகையில்: தார் ரோட்டின் தரம் அறிய சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. தவறு இருக்கும் பட்சத்தில் எங்களது அளவீடு சரியாகும் வரை மீண்டும் ரோடு அமைக்க சொல்வோம். தரமான தார் ரோடு போட்டால் தான் 'பில்' பாஸ் செய்வோம் என்றார்.

