/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் பொருட்கள் கடத்தலை கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
ரேஷன் பொருட்கள் கடத்தலை கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 07, 2024 06:07 AM
மூணாறு: மூணாறில் மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் டன் கணக்கில் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
மூணாறு அருகே மாட்டுபட்டி கொராண்டிக்காடு பகுதியில் மினி லாரியில் கடத்திய அரிசி, கோதுமை, மாவு ஆகியவற்றைக் கொண்ட 111 மூடைகள் இரு தினங்களுக்கு முன்பு போலீசாரிடம் சிக்கின. மூவாற்றுபுழாவைச் சேர்ந்த லாரி டிரைவர் நவ்ஷாத்தை கைது செய்தனர். லாரிக்கு முன்பு பாதுகாப்பிற்குச் சென்ற மூவாற்றுபுழாவைச் சேர்ந்த அரிசி மில் உரிமையாளர் தப்பி விட்டார். அவருக்கு ரேஷன் பொருட்கள் கடத்தியதாகவும், இது போன்று கடத்துவது வழக்கமான செயல் என்றும் நவுஷாத் போலீசாரிடம் கூறினார்.
அதனை மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் பயன்படுத்துவது இல்லை.
அவர்கள் புழுங்கல் அரிசியை பயன்படுத்துவதால் மட்டை அரிசியை வாங்குவதில்லை. இருப்பினும் ரேஷன் அரிசி வாங்காததால் கார்டு ரத்தாகி விடும் என்ற அச்சத்தில் 'பயோ மெட்ரிக்' முறையில் பொருட்கள் வழங்குவதால் விரல் அடையாளத்தை மட்டும் பதிவு செய்வது வழக்கம். அது போன்றவர்களின் அரிசியை ரேஷன் கடைக்காரர்களின் உதவியுடன் கடத்தி அரிசி மில்லில் பாலிஷ் செய்து பல்வேறு பெயர்களில் வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
முறைகேட்டில் ஈடுபடும் ரேஷன் கடைக்காரர்கள் மாதம் தோறும் அதிகாரிகளை கவனிப்பதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

