/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழைய மூணாறில் தொங்கு பாலம் இடுக்கி எம்.பி., நிதியில் அமைப்பு
/
பழைய மூணாறில் தொங்கு பாலம் இடுக்கி எம்.பி., நிதியில் அமைப்பு
பழைய மூணாறில் தொங்கு பாலம் இடுக்கி எம்.பி., நிதியில் அமைப்பு
பழைய மூணாறில் தொங்கு பாலம் இடுக்கி எம்.பி., நிதியில் அமைப்பு
ADDED : மார் 07, 2024 06:07 AM
மூணாறு: பழைய மூணாறில் ஹைரேஞ் கிளப் அருகே ரூ.73 லட்சம் செலவில் மீண்டும் தொங்கு பாலம் அமைக்கப்படுகிறது.
அப்பகுதியில் முதிரைபுழை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. 1984 நவ. 7ல் ஹைரேஞ் கிளப் வளாகத்தில் இறங்கிய ஹெலிகாப்டரை காண பழைய மூணாறில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் தொங்கு பாலத்தில் குவிந்ததால் பாரம் தாங்காமல் பாலம் அறுத்தது. பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து 14 மாணவ, மாணவிகள் இறந்தனர். அதன்பிறகு அங்கு சிமென்ட் பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் 2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. பழைய மூணாறு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோ உள்பட வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. அதனால் சேதமடைந்த பாலம் அருகே புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பாலம் சேதமடைந்த பகுதியில் இடுக்கி எம்.பி. டீன்குரியா கோஸ் நிதி மூலம் ரூ.73 லட்சம் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படுகிறது. முதிரைபுழை ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் தொங்கு பாலத்தின் பணிகளை எம்.பி., துவக்கி வைத்தார்.

