/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்
/
மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்
ADDED : பிப் 18, 2024 01:32 AM
தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு கருப்பசாமி, இவரது மனைவி பேச்சியம்மாள் 62. இவர்களது மகன்கள் பிரபாகரன், ராஜபிரபாகரன். கருப்பசாமி தேனி மேற்கு சந்தையில் டிம்பர் கடை நடத்தி வந்தார். 2017 ல் இறந்தார்.
பேச்சியம்மாளிடம் மருத்தும் உள்ளிட்ட செலவுகளை பார்த்துக்கொள்வதாக கூறி மகன் ராஜபிரபாகரன், இவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் சொத்துக்களை எழுதி வாங்கினர். மற்றொரு மகன் பிரபாகரனிடம் இருந்து விடுதலை பத்திரமும் எழுதி வாங்கினர்.
இந்நிலையில் பேச்சியம்மாள் உடல்நிலை நலம் பாதித்தது. ராஜபிரபாகரன் அவரது மனைவி இணைந்து பணம் தராமல் கொலைமிரட்டல் விடுத்தனர்.
பேச்சியம்மாள் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.